சைப்பிரஸ் தீவை மீண்டும் ஒன்றிணைக்கும் ஒப்பந்தம் எட்ட முடியாத ஒன்றல்ல - ஐநா

இந்த வாரத்தில் நடைபெறுகின்ற பேச்சுவார்த்தைகளில் சைப்பிரஸ் தீவை மீண்டும் ஒன்றிணைக்கும் ஒப்பந்தத்தை உருவாக்குவது கடினமாக இருக்கும். ஆனால், இது எட்டமுடியாத ஒன்றல்ல என்று சைப்ரஸுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் தூதர் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Andrew Burton/Getty Images

இந்த உத்தேச ஒப்பந்தத்துக்கு சர்வதேச உத்தரவாதமளிக்கும் , துருக்கி, கிரேக்கம், பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த பேச்சுவார்த்தைகளில் இணைவதற்கு முன்னால், சில சிக்கலான பிரச்சனைகளில் முன்னேற்றம் காண கிரேக்க மற்றும் துருக்கிய சைப்ரஸ் பகுதிகளின் தலைவர்கள், பெரும் துணிச்சலுடன் முயல்வதாக தூதர் எஸ்பென் பார்த் ஈடி கூறியிருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்ற சொத்துக்களின் சர்ச்சை தொடர்பாக முடிவுகள் எடுக்க இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது,

1974 ஆம் ஆண்டு முதல் சைப்பிரஸை கிரேக்கத்தோடு இணைக்கின்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து, துருக்கி படைகள் அதன் வடக்கு பகுதியை ஆக்கிரமித்தபோது தொடங்கி சைப்பிரஸ் தீவு இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்