பிரிட்டன்: 7 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக பதின்ம வயது பெண் கைது

ஒரு ஏழு வயது சிறுமியின் மரணம் தொடர்பாக 15 வயது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டனில் உள்ள யார்க்ஷர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Google
Image caption காயங்களுடன் இறந்த சிறுமி கண்டெடுக்கப்பட்ட இடம்

யார்க்ஷர் நகரின் வுட்தார்ப் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் உயிருக்கு அச்சறுத்தல் ஏற்படுத்தும் காயங்களுடன் இறந்த சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

உடனடியாக அந்த சிறுமி மருத்துவமனைக்கு எடுத்துச் சொல்லப்பட்டாலும், சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டதாக வடக்கு யார்க்ஷர் போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பதின்ம வயது பெண் தற்போது போலீஸ் காவலில் உள்ளதாகவும், அவரை அதிகாரிகள் விசாரித்து வருவதாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்.

சிறுமி உயிரிழந்த சூழலை மையமாக கொண்டு விசாரணை நடந்து வருவதாக ஒரு போலீஸ்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்