"பள்ளிகளில் முஸ்லிம் சிறுமிகளுக்கு தனி நீச்சல் குளம் கிடையாது"

ஸ்விட்சர்லாந்தில் இஸ்லாமிய பெற்றோர்கள் தங்களின் பெண் குழந்தைகளை ஆண்-பெண் இருபாலாருக்குமான பொது நீச்சல் குளங்களுக்கு அனுப்பி வைக்க, ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஸ்விட்சர்லாந்து வெற்றி பெற்றுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

"பொது பள்ளி பாடத்திட்டம்" மற்றும் சமூகத்தில் குழந்தைகள் "வெற்றிகரமாக ஒன்று கூடுதல்" ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதால் அதிகாரிகள் அதை நியாயப்படுத்தியுள்ளனர்.

அது மத சுதந்திரத்தில் தலையீடுவதாக உள்ளது என்று ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆனால் அதே சமயம் அது மத சுதந்திரத்தை மீறுவதாக இல்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பேசல் நகரில், கட்டாய பொது நீச்சல் பாடத்துக்கு தங்களது பெண்களை அனுப்ப மறுத்த துருக்கியை பாரம்பரியமாக கொண்ட இரண்டு ஸ்விட்சர்லாந்து பிரஜைகளால் இந்த வழக்கு தொடரப்பட்டது

இந்த விதிவிலக்கு பூப்படைந்த பெண்களுக்கு மட்டும் தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆனால் அந்த பெண்கள் அந்த வயதை அடையவில்லை என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு நெடுங்காலமாக நடந்த சர்ச்சைக்கு பிறகு, "பெற்றோருக்கான கடமையை மீறிவிட்டதாக" பெற்றோர்களுக்கு கூட்டு அபராதமாக 1,400 ஸ்விஸ் ஃபிராங்க்ஸ் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் சிந்தனை, மனம் மற்றும் மத சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐரோப்பிய மனித உரிமைகளின் மாநாட்டின் ஒன்பதாம் சட்டப்பிரிவை மீறுவதாக உள்ளது என்று அவர்கள் வாதித்தட்டனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

பெண்களுக்கு விலக்கு அளிக்க மறுப்பது மதச் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என ஐரோப்பிய மனித உரிமை ஆணையம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது

ஆனால் வெளிநாட்டினரை எந்த விதமான சமூக விலக்கலில் இருந்தும் பாதுகாப்பதற்காகவே இந்த சட்டம் வடிவமைக்கப்பட்டது. மேலும் தேவை மற்றும் பாரம்பரியத்திற்கு ஏற்ப கல்வி அமைப்பை வடிவமைக்க ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது

சமூக ஒன்றிணைப்பில் பள்ளிகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றும் மேலும் சில பாடங்களில் இருந்து விலக்கி வைப்பது மிக அரிதமான சூழ்நிலைகளில் மட்டுமே நியாயப்படுத்துகின்றன என்று தெரிவித்துள்ளது.

பொது நீச்சல் குளங்களிலிருந்து தங்கள் பெண் பிள்ளைகளை விலக்கி வைக்கும் பெற்றோர்களின் எண்ணத்தைக் காட்டிலும் உள்ளூர் பழக்கம் மற்றும் நெறிகளுக்கு ஏற்றவாறு வெற்றிகரமான சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும் முழு நீள கல்வியில் குழந்தைகளுக்கு உள்ள ஆர்வமே முக்கியம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

அதே சமயம் நீதிமன்றம் "பல சாதகமான மாற்று ஏற்பாடுகள்`` முன்வைக்கப்பட்டுள்ளன என்பதை சுட்டிக்காட்டியுள்ளது; பாரம்பரிய நீச்சல் உடையை அணிவதற்கு பதிலாக புர்கினிகளை அணிந்து கொள்ளலாம் மேலும் அவர்கள் சிறுவர்கள் இல்லாத அறைகளில் ஆடை மாற்றிக் கொள்ளலாம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.