ஆப்கன் நாடாளுமன்றத்திற்கு அருகில் தற்கொலை மற்றும் கார் குண்டு தாக்குதல்கள், 22 பேர் பலி

ஆப்கன் தலைநகர் காபூலில் நடைபெற்ற தற்கொலை மற்றும் கார் குண்டு தாக்குதல்களில் குறைந்தது 22 பேர்கொல்லப்பட்டுள்ளதாகவும், டஜன்கணக்கானோர் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஆப்கன் படையினர் (கோப்புப்படம்)

தேசிய நாடாளுமன்றத்திற்கு அருகில் ஒரு தற்கொலை குண்டுதாரி தன்னைத் தானே வெடிக்க செய்த சிறிது நேரத்தில், ஒரு கார் குண்டும் வெடித்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த தாக்குதலை, தங்கள் குழுவினரே நடத்தியதாகவும், உளவுத் துறை உறுப்பினர்களைக் குறிவைத்து இது நடத்தப்பட்டதாகவும் தாலிபான் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

காயமடைந்தோரில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஒருவரும் இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்