வங்கதேசம்: கையால் எழுதி வழங்கப்படும் மருந்து சீட்டுகளுக்கு தடைவிதிக்க கோரிக்கை

மருத்துவர்கள் கைகளால் எழுதி அளிக்கின்ற மருந்து சீட்டுகளுக்கு தடை விதிக்க வங்கதேச உயர் நீதிமன்றம் கோரியுள்ளது.

படத்தின் காப்புரிமை Manjunath Kiran/AFP/GettyImages

இந்த மருந்து சீட்டுகள் வாசிக்க முடியாதவாறு இருப்பதால், நோயாளிகள் தவறான மருந்துகளை உட்கொள்ளும் நிலைமை ஏற்படுவதாக அது கூறுகிறது.

மருத்துவர்களின் கையெழுத்து கிறுக்கல்களை பல நோயாளிகளும், மருந்தாளுனர்களும் வாசிக்க முடியாமல் போவதால், நோயாளிகள் தேவையில்லாத ஆபத்துக்கு உள்ளாவதும், பணத்தை வீணடிப்பதும் நடைபெறுவதாக வாதாடிய வழக்கறிஞர் ஒருவரின் புகாரை விசாரித்து இந்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் விடுத்துள்ளது.

தட்டச்சு செய்தும் அல்லது பெரிய எழுத்துக்களில் எழுதியும் மருந்து சீட்டுகளை வழங்குவதற்கு ஆணையிட நீதிமன்றம் சுகாதார அதிகாரிகளுக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்