காம்பியா உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பற்றாக்குறை

கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தல் பற்றி விசாரணை செய்ய வரும் மே மாதம் வரை காம்பிய உச்ச நீதிமன்றத்தில் போதிய நீதிபதிகள் இல்லை.

படத்தின் காப்புரிமை REUTERS/AFP
Image caption அடாமா பாரோ மற்றும் யாக்யா ஜமே (வலது)

தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும் அதிபர் யாக்யா ஜாமேயிடம் இருந்து வந்துள்ள புகாரை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கு இந்நிலை தோன்றியுள்ளது.

காம்பியா: தேர்தல் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிபர் தரப்பில் முறையீடு

தேர்தல் நேரத்தில் ஒரேயொரு நீதிபதி தான் நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். அண்டை நாடுகளிலுள்ள பல நீதிபதிகளிடம் அணுகியுள்ளபோதும், அவர்கள் இன்னும் காம்பியாவுக்கு வரவில்லை.

தேர்தல் முடிவுகளை ஏற்க ஜாமே மறுத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காம்பியாவின் தகவல் தொடர்பு அமைச்சர் ஷெரீப் போஜாங் திங்கள்கிழமை பதவி விலகியுள்ளார்.

தேர்தலில் தோற்ற அதிபரை சமரசம் செய்ய மேற்கு ஆஃப்ரிக்க தலைவர்கள் காம்பியா பயணம்

ஜாமே பதவியிலிருந்து இறங்க வேண்டுமென்று கோரியுள்ள மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்கிற பிராந்திய அமைப்பு, புதன்கிழமை காம்பியாவுக்கு பிரதிநிதி குழுவை அனுப்புகிறது,

காம்பியாவின் அரசியல் நெருக்கடிக்கு முக்கிய தீர்மானம் - மேற்கு ஆப்ரிக்க தலைவர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்