டிஜிட்டல் வானொலிக்கு மாறும் நார்வே

நார்வே நாட்டில் உள்ள பண்பலை ( எஃப்.எம்) வானொலி வலையமைப்பு நிறுத்தப்படுவது புதன்கிழமை முதல் தொடங்குகிறது.

உலகிலேயே நார்வேதான் பண்பலை வானொலி வலை அமைப்புகளை நிறுத்தும் முதல் நாடாகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

நார்வே, அங்குள்ள வானொலி வலையமைப்பை, மொத்தமாக டிஜிட்டல் ஒலிபரப்பாக மாற்றுகிறது. டி.ஏ.பி எனப்படும் இந்த டிஜிட்டல் ஒலிபரப்பு தொழில்நுட்பம் மேம்பட்ட தரம் மற்றும் சென்று சேரும் பரப்பளவு அதிகமானதாகவும் இருப்பதுடன், மலிவானதாகவும் இருக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பொன்று, நார்வே நாட்டு மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர், இந்த நடவடிக்கைக்கு எதிராக இருப்பதாகக் காட்டியது. நார்வேயில் உள்ள கார்களில் பெரும்பாலானவற்றில் டிஜிட்டல் ஒலிபரப்பு வசதி இல்லை என்பது இதற்கு ஒரு காரணமாகும்.

இந்த எஃப் எம் சேவைகள் நிறுத்தம் என்பது வடக்கு நகரான போடேவில் தொடங்கி , பின்னர் இந்த ஆண்டு இறுதிக்குள் நாடெங்கிலும் நிறுத்தப்படும். ஆனாலும், சமூக வானொலி நிலையங்கள் மேலும் ஐந்தாண்டுகளுக்கு செயல்பட அனுமதிக்கப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்