ரோபோக்களிடமிருந்து மனிதர்களுக்கு பாதுகாப்பு - ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு

செயற்கை அறிவு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கான அடிப்படைகளை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ரோபோக்களுக்கு மின்னணு நபர்கள் என்ற சட்ட ரீதியான தகுதியை அளிப்பது மற்றும் ரோபோக்களிடம் இருந்து மனிதர்களைப் பாதுகாப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை இந்தச் சட்டத்தின் கீழ் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ரோபோக்களை தயாரிப்பவர்கள், 'கில் -சுவிட்ச்' என்று சொல்லப்படும் ரோபோவை அழிக்கும் அம்சத்தைச் சேர்த்து தான் வடிவமைக்க வேண்டும் என்பதும் ஒரு திட்டத்தின் கீழ் தேவைப்படுகிறது.

இது போன்ற பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய ஒரு அறிக்கை ஐரோப்பிய நாடாளுமன்ற சட்ட கமிட்டியின் முன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாகரீக வளர்ச்சியின் கடைசி நிகழ்வுதான் செயற்கை அறிவு வளர்ச்சி: ஸ்டீஃபன் ஹாகிங்

கிளிக் - தொழில் நுட்ப காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க :

பிபிசி தமிழ் பேஸ்புக் பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்