இஸ்ரேலிய படையினரை பாலத்தீன தீவிரவாதிகள் காதல் வலையில் வீழ்த்தி வேவு பார்ப்பதாக குற்றச்சாட்டு

பாலத்தீன தீவிரவாதிகள் போலியான அடையாளங்களை பயன்படுத்தி, இஸ்ரேலியப் படையினரை காதல், இணையவழி சந்திப்புகள் மூலம் கவர்ந்திழுத்து வேவு பார்ப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை IDF

இந்த நடவடிக்கைக்குப் பின் ஹமாஸ் குழு இருப்பதாக சொல்லப்படுகிறது. பல டஜன்கணக்கான ராணுவ அதிகாரிகள் இந்த சதி வலையில் விழுந்துள்ளனர்.

எதிர்பாலினத்தை சேர்ந்த கவர்ச்சியான உறுப்பினர்கள் படையினரை அணுகுகின்றனர்.

படத்தின் காப்புரிமை IDF

நாளடைவில் இருவருக்கும் இடையே தொடர்பு வளர, சம்பந்தப்பட்ட படையினரின் கைப்பேசியை தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் எடுக்கும் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வைக்கப்படுகின்றனர். தொடர்ந்து, படையினருக்கு தெரியாமலே புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகளை எடுத்து விடுகின்றனர்.

இந்த சதித்திட்டமானது மிக மோசமான ஒன்றாக இருந்தாலும், இஸ்ரேலிய பாதுகாப்புக்கு மிகவும் குறைந்த அளவிலானே சேதம் விளைவித்திருப்பதாக புலனாய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்