இரான் வாங்கிய முதல் ஏர்பஸ் விமானம் தெஹரானில் பத்திரமாக தரையிறங்கியது

ஏர்பஸ் நிறுவனத்தின் பயணியர் விமானம் ஒன்றை இரான் வாங்கிய நிலையில் அது தெஹரானுக்கு வந்தடைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இரான் வாங்கிய முதல் ஏர்பஸ் விமானம் தெஹரானில் பத்திரமாக தரையிறங்கியது

பல தசாப்தங்களில் மேற்குலக உற்பத்தியாளர் ஒருவரிடமிருந்து இரான் விலைக்கு வாங்கும் முதல் விமானம் இதுவாகும்.

பல தசாப்தங்களாக பொருளாதார ரீதியாக தனிமைப்பட்ட நிலையில் இருந்து, இரானின் மீண்டெழுந்து வருவதன் அடையாளமாக இந்த விமானத்தின் வரவு பார்க்கப்படுகிறது.

இறுதியாக, நூறு ஏர்பஸ் விமானங்களை இரான் வாங்கி முடிக்கும்.

படத்தின் காப்புரிமை Getty Images

இரான் தனது அணுஆயுத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி கொண்டதற்கு பிரதிபலனாக அதன் மீதான பொருளாதார தடை உத்தரவுகளை பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் உலகின் சக்திவாய்ந்த நாடுகள் விலக்க ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இந்த ஒப்பந்தமானது முடிவுக்கு வந்தது.