முடிவுக்கு வருகிறது கியூபர்களுக்கான அமெரிக்க விசாயின்றி தங்கும் சலுகை

கியூபா மக்கள் விசா இல்லாமல் குடியேறிகளாக அமெரிக்காவுக்கு வந்து தங்க அனுமதிக்கும் நீண்டகால கொள்கையை அதிபர் பராக் ஒபாமா முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption இதுவரை அமெரிக்கா வந்த கியூபா குடியேறிகள் அங்கு தங்கும் அனுமதி பெறுகின்றனர்

20 ஆண்டுகளாக இருந்து வருகின்ற இந்த கொள்கைப்படி,, அமெரிக்காவுக்கு குடியேறிகளாக வந்தடையும் கியூபா மக்கள், அங்கு ஓராண்டு தங்கியிருந்த பின்னர், சட்டப்படி நிரந்தரமாக தங்குகின்ற உரிமையை பெறுபவர்களாக இருந்து வந்தனர்.

அமெரிக்கா - கியூபா இடையே 55 வருடங்களுக்கு பிறகு விமான சேவை தொடக்கம்

இதற்கு பதில் நடவடிக்கையாக, அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் அல்லது நாடு கடத்தப்படும் தங்களது மக்களை ஏற்றுகொள்ள கியூபா ஒப்பு கொண்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்த பராக் ஒபாமாவின் ஹவானா பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மாற்றியமைத்தது

அமெரிக்க அதிபராக பதவியில் இருக்கும் கடைசி நாட்களில் கியூபாவோடு நல்லுறவை ஏற்படுத்துவதற்கு பாராக் ஒபாமா மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளின் தொடர்ச்சியாக இது அமைகிறது.

கடனை ஒரு நூற்றாண்டாக "ரம்" மதுவாக திருப்பி வழங்க எண்ணும் கியூபா

விசா இல்லாமல் அமெரிக்கா வர அனுமதிக்கிற கொள்கையானது இதுவரை கியூபா மக்களுக்கு மட்டுமே பொருந்துவதாக இருந்து வந்துள்ளது.

விசா இல்லாமல் அமெரிக்கா வருகின்ற பிற நாட்டு குடியேறிகள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவர்.

காணொளி: விடைபெறும் ஒபாமா சாதித்தது என்ன?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
விடைபெறும் ஒபாமா சாதித்தது என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்