குடியேறிகளை எட்டி உதைத்த ஹங்கேரி பெண் செய்தியாளருக்கு 3 ஆண்டுகள் நன்னடத்தை கால தண்டனை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குடியேறிகளை எட்டி உதைக்கும் ஹங்கேரி பெண் செய்தியாளர் காணொளி

ஹங்கேரி நாட்டை சேர்ந்த பெண் கேமரா செய்தியாளர் ஒருவர் ஹங்கேரி - செர்பியா எல்லையில் குடியேறிகளை எட்டி உதைப்பதும், தடுக்கி விழவைப்பதும், பதிவானதைத் தொடர்ந்து, ஒழுங்கற்ற நடத்தை குற்றச்சாட்டில், மூன்று ஆண்டுகளுக்கு நன்னடத்தை கால தண்டனை விதிக்கப்பட்டார்.

2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் போலீஸ் பாதுகாப்பு வட்டத்தை மீறி குடியேறிகள் வெளியேறியதை பெட்ரா லாஸ்லோ படம்பிடித்து கொண்டிருந்தார்.

தப்பியோடிய குடியேறிகளில் இருவரை பெட்ரா எட்டி உதைத்தது படம் பிடிக்கப்பட்டது. அதில், ஒரு இளம்பெண்ணும் அடங்குவார்.

பின்னர், ஒரு குழந்தையை சுமந்து சென்ற நபர் ஒருவரையும் தடுக்கி விழ வைத்தது போல் காட்சிகள் காட்டின.

இந்த தண்டனை குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக பெட்ரா கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பெட்ராவின் இந்த நடவடிக்கைகள் வேகமாக பரவியதை தொடர்ந்து, வலதுசாரி தொலைக்காட்சி சேனலான என் 1 டிவி அவரை பணிநீக்கம் செய்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்