கியூபர்களுக்கு இனி நேரடி அனுமதி கிடையாது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கியூபர்களுக்கு இனி நேரடி அனுமதி கிடையாது

கியூபாவின் கம்யூனிஸ ஆட்சியை விட்டு தப்பி சென்றவர்களுக்கு கடந்த இருபது வருடங்களாக அமெரிக்காவில், விசா இன்றி தங்கியிருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

அதன் மூலம் அவர்களுக்கு தானாகவே ஒருவருடத்தில் வதிவிட அந்தஸ்து கிடைத்துவிடும்.

ஆனால், அந்த நடைமுறை முடிவுக்கு வருவதாக தற்போது அமெரிக்க அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பதினெட்டு மாதங்களுக்கு முன்னதாக கியூபாவுடனான இராஜதந்திர உறவுகளை ஒபாமாவின் அரசாங்கம் புதுப்பித்துக்கொண்டதை அடுத்து இது நடந்திருக்கிறது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.