துருக்கி : தீவிரவாத தாக்குதல் ஒன்றின் தொடர்பாக 5 படையினர் கைது

துருக்கியில் கடந்த மாதம் நிகழ்ந்த மிகவும் குர்தீஷ் தீவிரவாதிகள் செய்ததாகக் கூறப்பட்ட கொடூரமான தற்கொலை தாக்குதல் ஒன்றின் விசாரணையின் ஒரு அங்கமாக ஐந்து படையினரை துருக்கி கைது செய்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தீவிரவாத தாக்குதல் ஒன்றில் தொடர்பாக 5 படையினர் கைது

கடந்த வியாழனன்று நீதிமன்றம் ஒன்று ஐந்து படையினரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதாக அரசின் செய்தி நிறுவனமான ஆனடோலு தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலானது மத்திய நகரான கேசெரியில் உள்ள ஒரு பேருந்தை குறிவைத்து நடத்தப்பட்டது. இதில், பணியில் இல்லாத 14 படையினர் கொல்லப்பட்டனர். மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் , பலியானவர்கள் மற்றும் கைது செய்யப்பட்ட ஐந்து படையினர் அனைவரும் ஒரே ராணுவ தளத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்