சவுதி அரேபிய பெண்கள் போராடுவது ஏன்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சவுதி அரேபிய பெண்கள் போராடுவது ஏன்?

சவுதியில், பெண்ணாக இருப்பதில் ஏராளமான கட்டுப்பாடுகள்.

ஆண்களின் பாதுகாப்பிலேயே பெண்கள் இருக்கவேண்டும் என்பதால் பெண்களால் பல விஷயங்களில் சுயமாக முடிவெடுக்க முடியாது.

தந்தை, சகோதரன், மகன் உள்ளிட்ட ஆண்கள் அனுமதி அளித்தால் மட்டுமே பெண்கள் முடிவெடுக்க முடியும்.

அந்த நடைமுறைக்கு முடிவு கட்டவேண்டும் என்று ஆயிரக்கணக்கான பெண்கள் கோரத்துவங்கியுள்ளனர்.

டுவிட்டர் மூலமும் இணையம் வாயிலாகவும் அவர்கள் தமது உரிமைகளுக்காக போராடிவருகிறார்கள்.

தனது எதிர்கால கனவை தொடர முடியாமல் தடுக்கப்பட்டதாக கூறுகிறார் தனது உண்மையான அடையாளத்தை வெளியிட விரும்பாத சாரா.

"வெளிநாட்டில் சட்டம் படிக்க விரும்பினேன். ஆனால் அப்பா அனுமதிக்கவில்லை. அதற்காக இன்றுவரை வருந்துகிறேன்".

பெண்களுக்கு ஆண்கள் பாதுகாவலர்களாக இருப்பதை மதத்தலைவர்கள் சிலர் ஆதரிக்கிறார்கள்.

மதத்தலைவர்கள் மட்டுமல்ல பெண்கள் சிலரும் கூட, ஆண் பாதுகாப்பு பெண்களுக்கு நல்லதே என்று நம்புகிறார்கள். "மரியாதையிழந்த மேற்குலக பெண்களைப் போல எங்களையும் மாற்ற இந்த பிரச்சாரம் முயல்கிறது" என்கிறார், ஆண்களின் பாதுகாப்பை ஆதரிக்கும் பெண்ணான ரத்வா அல் யூசுப்.

ஆண் அனுமதி அல்லது துணையின்றி சவுதி அரேபியாவில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கவோ, வாகனம் ஓட்டவோ, வெளிநாடு செல்லவோ முடியாது. அதற்கெல்லாம் அங்கே தடை இருக்கிறது.