தேர்தல் தலையீடு என்று ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை விலகலாம் - டிரம்ப் சூசகம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற குற்றச்சாட்டினால் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை தான் நீக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption தைவானை தனி நாடாக ஏற்றுக்கொள்ளாத "ஒரே சீனா" என்ற கொள்கை பற்றி விவாதிக்க வேண்டும் - டிரம்ப்

தீவிரவாதத்தை எதிர்க்கவும், பிற முக்கிய குறிக்கோள்களை அடையவும் அமெரிக்காவுக்கு ரஷ்யா உதவினால் இந்த தடை நடவடிக்கைள் இல்லாமல் போகலாம் என்று வால் ஸ்டீட் பத்திரிகையிடம் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப் கூறியிருக்கிறார்.

இணையவெளி தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாப்பை அதிகரிக்கும் அமெரிக்கா

இணையத் தாக்குதல்களை பயன்படுத்தி, அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்பில் தலையிட்டு தேர்தல் முடிவின் மீது தாக்கம் செலுத்த முயன்றதாக ரஷ்யாவை அமெரிக்க உளவுத் துறை நிறுவனங்கள் குற்றஞ்சாட்டிய பின்னர் இந்த தடைகள் விதிக்கப்பட்டன.

படத்தின் காப்புரிமை AFP / Getty Images
Image caption அமெரிக்காவுக்கு உதவினால், தேர்தல் தலையீடு என்று ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை விலகலாம் - டிரம்ப் சூசகம்

தைவானை தனி நாடாக ஏற்றுக்கொள்ளாத "ஒரே சீனா" என்ற கொள்கை பற்றியும் விவாதிக்கப்பட வேண்டியுள்ளதாக டிரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடி: ரஷ்யா உறுதி

சீனா தனது நாணயத்தை சர்வதேச சந்தையில், சந்தை நிலவரத்துக்கேற்ப மதிப்பு மாறும் முறையை அனுமதித்து அமெரிக்க நிறுவனங்களை போட்டியிட சீனா அனுமதிக்க வேண்டும் அவர் கூறியுள்ளார்.

சீனாவின் கொள்கைகளுக்கு அமெரிக்கா கட்டுப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை: டிரம்ப்

ஆனால், தான் பதவியேற்றவுடன் நாணய மதிப்பை கட்டுப்படுத்தும் நாடு என்று சீனாவை முத்திரை குத்தப்போவதில்லை என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.

இணைய அத்துமீறல்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இணைய அத்துமீறல்: ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

போலாந்திற்கு அமெரிக்க ராணுவ படை; தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ரஷ்யா கருத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்