மாலியில் ஆப்ரிக்க நாடுகளின் உச்சி மாநாடு, காம்பியா அரசியல் நெருக்கடி பற்றி விவாதம்

மாலியில் ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்குகொள்ளும் முக்கிய உச்சி மாநாடு ஒன்று தொடங்கியுள்ளது. காம்பியாவின் அரசியல் நெருக்கடி இந்த மாநாட்டில் பெரும்பகுதி பேச்சுவார்த்தைகளை ஆக்கிரமிக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption யாக்யா ஜாமேவை பதவியில் இருந்து இறங்க செய்வதற்கு நடத்திய பேச்சுவார்த்தையில் மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் தோல்வி

காம்பியாவை நீண்டகாலம் ஆட்சி செய்த யாக்யா ஜாமேவை பதவியில் இருந்து இறங்க செய்வதற்கு, மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் தோல்வியடைந்த ஒரு நாளுக்கு பின்னர் தொடங்கிய, 27-வது ஆப்ரிக்க-பிரான்ஸ் உச்சி மாநாட்டில் காம்பிய அதிபர் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அடாமா பாரோ கலந்து கொள்கிறார்.

காம்பியா அதிபர் தேர்தலில் 22 ஆண்டுகளாக ஆட்சி செய்த யாக்யா ஜமே தோல்வி; மக்கள் கொண்டாட்டம்

ஜனவரி 19 ஆம் நாள் பாரோ ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டிய நிலையில், கடந்த மாதம் நடத்தப்பட்ட அதிபர் தேர்தவில் தான் தோல்வியடைந்ததை ஜாமே ஏற்றுகொள்ள மறுத்து வருகிறார்.

படத்தின் காப்புரிமை Reuters/AFP
Image caption அடாமா பாரோ (இடது) மற்றும் யாக்யா ஜாமே (வலது)

தேர்தலில் தோற்ற அதிபரை சமரசம் செய்ய மேற்கு ஆஃப்ரிக்க தலைவர்கள் காம்பியா பயணம்

இந்த நாளுக்குள் ஜாமே பதவியில் இருந்து இறங்காவிட்டால், மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் எனப்படும் பிராந்திய அமைப்பு ராணுவ ரீதியில் தலையிடுவதாக மிரட்டியுள்ளது.

மேலும் படிக்க:

காம்பியாவின் அரசியல் நெருக்கடிக்கு முக்கிய தீர்மானம் - மேற்கு ஆப்ரிக்க தலைவர்கள்

தோல்வியை ஏற்காமல் புதிய அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அடம்பிடிக்கும் காம்பியா அதிபர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்