கோசோவோவுக்கு சர்ச்சைக்குரிய முறையில் ரயில் சேவையை தொடங்கிய செர்பியா

செர்பியா இன மக்கள் வாழும் கொசோவோவின் வடக்கு பகுதிக்கு செர்பிய தேசிய கொடியின் நிறத்தில் வண்ணம் அடிக்கப்பட்ட ஒரு ரயிலை பெல்கிரேடில் இருந்து அனுப்பி ரயில் சேவை ஒன்றை செர்பியா தொடங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை OLIVER BUNIC/AFP/Getty Images
Image caption ரயிலின் வெளிப்புறத்தில் "கேசோவோ செர்பியாவை சேர்ந்ததே" என்ற சுலோகம் 20 வேறுபட்ட மொழிகளில் வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது

இந்த நடவடிக்கை ஆத்திரமூட்டுவதாக அமைகிறது என்று கேசோவோ அதிகாரிகள் கண்டித்திருக்கின்றனர்.

இந்த ரயிலின் வெளிப்புறத்தில் "கேசோவோ செர்பியாவை சேர்ந்ததே" என்ற சுலோகம் 20 வேறுபட்ட மொழிகளில் வண்ணம் அடிக்கப்பட்டுள்ள நிலையில், ரயிலின் உட்புறத்தில் கோசோவோவிலுள்ள பிரபல மடாலயங்களை சேர்ந்த செர்பிய ஆர்த்தோடாக்ஸ் மதத் தலைவர்களின் உருவங்கள் வரையப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை OLIVER BUNIC/AFP/Getty Images

2008 ஆம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக கோசோவோ தன்னிச்சையாக அறிவித்தது. இந்த பிரகடனம் ரஷ்யா ஆதரவு பெற்றிருக்கும் செர்பியாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

படத்தின் காப்புரிமை OLIVER BUNIC/AFP/Getty Images
Image caption 2008 ஆம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக கோசோவோ தன்னிச்சையாக அறிவித்தது

1998 முதல் 1999 வரையான காலத்தில் இந்த பிராந்தியத்தில் செர்பியர்களுக்கும், கோசோவோ அல்பேனியர்களுக்கும் இடையில் கசப்பான மோதல் நடைபெற்றது.

காணொளி: தப்பியோடும் குடியேறிகளை எட்டி உதைக்கும் செய்தியாளர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குடியேறிகளை எட்டி உதைக்கும் ஹங்கேரி பெண் செய்தியாளர் காணொளி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்