சிரியாவின் தியர் எல்-சௌரின் அரசு பகுதிகளில் ஐ.எஸ். புதிய தாக்குதல்

சிரியாவின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் தியர் எல்-சௌரின் அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் பெரியதொரு புதிய தாக்குதலை இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழவினர் ஆரம்பித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters

ஐ.எஸ். மற்றும் அரச படைப்பிரிவுகளுக்கு இடையில் நடைபெற்றுள்ள கடும் மோதல்களில் இருதரப்பிலும் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறைந்தது ஆறு பெரிய குண்டுவெடிப்புக்களை கேட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

காணொளி: சிரியா போர்நிறுத்தம் நிலைக்குமா? நீடிக்குமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சிரிய போர்நிறுத்தம் நிலைக்குமா? நீடிக்குமா?

அரசு போர் விமானங்கள் ஐ.எஸ். நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

தியர் எல்-சௌரின் பாதிக்கும் மேலான பகுதிகளை ஜிகாதிகள் ஏற்கெனவே தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அரசிடம் இருக்கும் பகுதிகளை சுமார் இரண்டு ஆண்டுகளாக அவர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

சிரியா அரசு படைகள் வெற்றியை நோக்கி பயணிக்கின்றன: அசாத்

இந்த நகரத்தை சுற்றியிருக்கும் மாகாணத்தின் பெரும் பகுதியை ஜிகாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர்.

மேலும் வாசிக்க:

டமாஸ்கஸ் ராணுவ விமான நிலையத்தின் மீது குண்டுத்தாக்குதல்

சிரியா போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது: புதின்

சிரியா: சின்னாபின்னமாகும் அலெப்போ

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்