இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்சனை குறித்து பாரிசில் முக்கிய மாநாடு: தீர்வு ஏற்படுமா?

மத்திய கிழக்கு பிரச்சனை குறித்து விவாதிப்பதற்கு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கும் மாநாட்டில் கலந்து கொள்ள 70-க்கும் மேற்பட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ராஜிய அலுவலர்கள் குழுமி வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்சனையில், 'இரு தனித்தனி நாடுகள்' என்ற தீர்வுக்கு இம்மாநாடு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த மாநாட்டில் இஸ்ரேலும், பாலத்தீனமும் கலந்து கொள்ளவில்லை.

இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளரான பிரான்ஸ், வருங்காலத்தில் இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்சனை தொடர்பாக உண்டாகும் அமைதி உடன்படிக்கைக்கு அடிப்படையாக இந்த 'இரு தனித்தனி நாடுகள்' தீர்வினை ஏற்றுக் கொண்டு பதிவு செய்வது முக்கியம் என்று தெரிவித்துள்ளது.

பாரிசில் நடக்கும் இந்த மாநாட்டை, கடந்த காலத்தின் நீட்சி என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ வர்ணித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்