போதை மருந்தை ஒழிக்க பிலிப்பைன்ஸில் ராணுவ சட்டம் ; எச்சரிக்கும் டுடெர்டே

பிலிப்பைன்ஸில் போதை மருந்து பிரச்சனைகள் மோசமானால் ராணுவ சட்டம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption போதை மருந்து பிரச்சனைகள் மோசமானால் ராணுவ சட்டம் அமல் : ரோட்ரிகோ டுடெர்டே

இந்த தீவில் உள்ள பிலிப்பினோ மக்கள் மற்றும் இளைஞர்களை பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கமாக இருக்கும் என்று 71 வயதுடைய இந்த முன்னாள் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

டுடெர்டே மேற்கொண்ட போதை மருந்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸ் போதை மருந்து நாடாக மாறுவதை தடுக்கவே இந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமையன்று தெற்குநகரமான டிவாவுவில் தொழிலதிபர்களிடம் பேசிய டுடெர்டே, ''நான் விரும்பினால் , போதை மருந்து பிரச்சனை நச்சுத்தன்மை வாய்ந்ததாக மோசமடைந்தால் ராணுவ ஆட்சியை அமல்படுத்துவேன். யாரும் என்னை தடுக்க முடியாது,'' என்றார் அவர்.

மேலும், தன்னுடைய நாடு மற்றெதையும் விட முக்கியமானது என்றும் , சட்ட வரம்புகளையும் விட முக்கியமானது என்றும் டுடெர்டே கூறியுள்ளார்.

ராணுவ ஆட்சியின் மூலம் சாதாரண சிவில் சட்டங்களை நிலைநாட்ட தன்னுடைய ராணுவத்தை டுடெர்டேவால் பயன்படுத்த முடியும்.

அதுமட்டுமின்றி, குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் மக்களை கைது செய்து நீண்ட காலம் சிறையில் வைக்க முடியும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

ட்விட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்