டிரம்ப் பதவியேற்பு: பங்கேற்க போர் கொடி தூக்கும் ஜனநாயக கட்சியினர் அதிகரிப்பு

சிவில் உரிமைகளை பரப்புரை செய்கின்றவரும், ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜான் லிவிஸை டிரம்ப் விமர்சித்த பிறகு, வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் டொனால்ட் டிரம்பின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று தெரிவிக்கிற ஜனநாயக கட்சியின் ஆண் மற்றும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகரித்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption டொனால்ட் டிரம்பை முறையான அதிபராக தான் கருதவில்லை - ஜான் லிவிஸ்

டொனால்ட் டிரம்பை முறையான அதிபராக தான் கருதாததால், டிரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போவதில்லை என்று லிவிஸ் கூறிய பிறகு, அவர் பேச மட்டுமே செய்வார். செயல்பாடு எதுவும் இருக்காது என்று டொனால்ட் டிரம்ப் டிவிட்டர் பதிவிட்டிருந்தார்.

காணொளி: புலனாய்வு அமைப்புகளுடன் முரண்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
புலனாய்வு அமைப்புகளுடன் முரண்படுகிறாரா டொனால்ட் டிரம்ப்

டிரம்பின் இந்த பதிலால், சக குடியரசு கட்சியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை, டிரம்ப் அதிக மரியாதையோடு நடத்துவதாக பிரபல பழமைவாத வர்ணனையாளர் பில் கிறஸ்டெல் கூறியிருக்கிறார்.

காணொளி: மருமகனுக்கு ஆலோசகர் பதவி: சர்ச்சையில் டிரம்ப்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மருமகனுக்கு ஆலோசகர் பதவி: சர்ச்சையில் டிரம்ப்

சிவில் உரிமைகளின் தலைவர் மாட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கையையும், சாதனைகளையும் கொண்டாடும் விடுமுறை தினத்துக்கு சற்றே முன்னர் இந்த சர்ச்சை வந்துள்ளது.

மேலும் வாசிக்க:

தேர்தல் தலையீடு என்று ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடை விலகலாம் - டிரம்ப் சூசகம்

ரஷ்யாவுடன் சமரசம் செய்து கொண்டேனா? ஆவேசத்துடன் டிரம்ப் மறுப்பு

தென் சீனக்கடல் விவகாரம் : டிரம்ப் நிர்வாகத்துடன் மோத தயாராகும் சீனா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்