ஐரோப்பிய ஒன்றிய சந்தையை பிரிட்டன் இழந்தால் மாற்று நடவடிக்கை

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும்போது, ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளை அணுகும் உரிமையை இழக்குமானால், அதற்கு பதிலான மாற்று நடவடிக்கைகளை பிரிட்டன் எடுக்கும் என்று வெளியுறவு அமைச்சர் பிலிப் ஹாம்மண்ட் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை EPA

ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்குள் மக்கள் சுதந்திரமாக குடியேறுவதைக் கட்டுப்படுத்த விரும்புவதாக பிரிட்டிஷ் அரசு கூறுகிறது; ஆனால் அப்படி செய்தால், அது ஐரோப்பிய ஒன்றியம் முழுவதையும் ஒற்றைச் சந்தையாக அணுகும் வசதிக்குப் பொருந்தாத ஒன்றாகும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூறுகின்றன.

நேட்டோவுக்கு டிரம்ப் முழு ஆதரவை வழங்குவார்: பிரிட்டன் பிரதமர் நம்பிக்கை

பிரிட்டனின் பொருளாதார மற்றும் சமூக மாதிரிகளை மாற்றி நஷ்டத்தை பிரிட்டன் ஈடுசெய்ய முடியும் என்று ஹாம்மண்ட் கூறியுள்ளார்.

மக்களிடம் உண்மை பேசுமாறு சக அதிகாரிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டன் தூதர் அறைக்கூவல்

அது பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை. ஆனால், அது பிரிட்டனை குறைந்த வரி மற்றும் குறைந்த ஊதியம் கொண்ட பொருளாதாரமாக மாற்றுவதாக இருக்கும் சாத்தியக்கூறும் அதில் ஒன்றாக இருக்கலாம் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பிரிட்டன் அவ்வாறு செய்தால், பிரிட்டனுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தை இட்டுச்செல்லக்கூடும்.

மேலும் வாசிக்க:

அண்டார்டிகாவில் உருகி வரும் பனிப்பாறைகள் : பிரிட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுவினர் ஆய்வு

பிரிட்டன்: பிரெக்ஸிட்டை எதிர்த்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்