சீனா- பாகிஸ்தான் பொருளாதார பாதை பாதுகாப்பிற்கு இரு கப்பல்களை வழங்கியது சீனா

குவாடர் துறைமுகத்தையும், சீனா- பாகிஸ்தான் பொருளாதார பாதையோடு தொடர்புடைய கடல்வழி பாதைகளையும் பாதுகாப்பதற்கு பாகிஸ்தான் கடற்படைக்கு இரண்டு கப்பல்களை சீனா வழங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை ASIF HASSAN/AFP/Getty Images

அதிநவீன தொழில்நுட்பத்தோடு உருவான துப்பாக்கிகளை கொண்டிருக்கும் வகையில், சீனாவில் கட்டியமைக்கப்பட்ட இந்த கப்பல்களை, பாகிஸ்தானின் கடற்படை தளபதி துணை அட்மிரல் அரிபுல்லா ஹூசைனி பெற்றுகொண்டார்.

'சீனா- பாகிஸ்தான் உறவு தேனிலும் இனிப்பானது: நவாஸ் ஷெரிப்

இதுவொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று கூறிய அவர், இதனால் பாகிஸ்தான் கடற்படை வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் மேற்கு பகுதியையும், குவாடர் துறைமுகத்தையும் இணைப்பதற்கான உள்கட்டுமான பணி திட்டங்கள் பலவற்றை இரு கூட்டாளி நாடுகளும் செயல்படுத்தி வருகின்றன.

'ஆப்கன்- தாலிபன் பேச்சுக்களை பாகிஸ்தான் நடத்திவைத்துள்ளது'

இந்த முயற்சி, சீனாவின் பொருட்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்ரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்வதற்கு புதிய வழிகளை திறந்து வைக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்