கொசோவாவுக்கு செர்பிய அதிபர் எச்சரிக்கை

செர்பியா தன்னுடைய எல்லையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தற்காத்து கொள்ளும் என்றும், தேவைப்பட்டால் கொசோவாவில் வாழும் செர்பிய இன மக்களை பாதுகாக்க தனது படையை அனுப்பும் என்றும் செர்பிய அதிபர் டோமிஸ்லாவ் நீக்கோலிச் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

படத்தின் காப்புரிமை OLIVER BUNIC/AFP/Getty Images
Image caption கொசோவா மோதலை ஏற்படுத்த முயல்வதாக நீக்கோலிச் குற்றச்சாட்டு

பால்கன் பகுதியில் உள்ள இந்த இரு அண்டை நாடுகளுக்கிடையே அதிகரித்துள்ள பதட்டத்தின் மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

சனிக்கிழமையன்று செர்பிய இன மக்கள் வாழுகின்ற கொசோவோவின் வடபகுதிக்கு ரயில் ஒன்றை அனுப்ப செர்பியா முயற்சித்தது. ஆனால், எல்லைக்கு முன்னால் அது நிறுத்தப்பட்டது.

கொசோவோவுக்கு சர்ச்சைக்குரிய முறையில் ரயில் சேவையை தொடங்கிய செர்பியா

"கொசோவோ செர்பியாவை சேர்ந்ததே" என்ற சுலோகம் பல மொழிகளில் எழுதப்பட்டிருந்த இந்த ரயில் சேவையை தடுத்து நிறுத்த எல்லா நடவடிக்கையையும் எடுக்கப்போவதாக கொசோவா தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை OLIVER BUNIC/AFP/Getty Images

கொசோவா மோதலை ஏற்படுத்த முயல்வதாக நீக்கோலிச் குற்றஞ்சாட்டியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு செர்பியாவிடம் இருந்து சுதந்திரம் பெறுவதாக கொசோவோ தன்னிச்சையாக அறிவித்தது. இதை ரஷ்யா ஆதரவு பெற்றிருக்கும் செர்பியா அங்கீகரிக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்