பஹ்ரைன் 3 ஷியா செயற்பாட்டாளர்களுக்கு நிறைவேற்றிய மரண தண்டனைக்கு எதிர்ப்பு

2014 ஆம் ஆண்டு நடைபெற்றதொரு குண்டு தாக்குதலில் 3 காவல்துறையினரை கொலை செய்தது தொடர்பாக 3 ஷியா செயற்பாட்டாளர்களுக்கு பஹ்ரைன் அதிகாரிகள் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AP

சுன்னி முஸ்லிம்களால் ஆளப்படும் நாட்டில் ஆறு ஆண்டுகளில் மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை.

கோசோவோவுக்கு சர்ச்சைக்குரிய முறையில் ரயில் சேவையை தொடங்கிய செர்பியா

இது சர்வதேச சட்டங்களை மீறுகின்ற அவமானமிக்க செயல்பாடு என்று சர்வதேச மனித உரிமைகள் குழுவான "ரிப்ரைவ்" கூறியுள்ள நிலையில், இந்த மரண தண்டனையை நீதிக்கு புறம்பான கொலை என்று ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் டாக்டர் ஆக்னஸ் கலமார்டு விவரித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AP

இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்திகள் வெளிவந்த பின்னர் போராட்டக்காரர்களும், துக்கம் அனுசரிப்போரும் ஷியா மக்கள் வாழும் கிரமங்களின் வீதிகளில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்