ஒபாமா மருத்துவ காப்பீட்டுக்கு பதிலாக கட்டுப்படியாகக்கூடிய மருத்துவ காப்பீடு சட்டம் - டிரம்ப்

அதிபர் ஒபாமா மருத்துவ காப்பீடு திட்டத்தற்கு பதிலாக கட்டுப்படியாகக்கூடிய மருத்துவ காப்பீடு சட்டத்தை இறுதிசெய்யும் நிலையில் இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட்டுக்கு அளித்திருக்கும் பேட்டியில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஒபாமா மருத்துவ காப்பீட்டுக்கு பதிலாக கட்டுப்படியாகக்கூடிய மருத்துவ காப்பீடு சட்டம் - டிரம்ப்

ஒவ்வொருவருக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும்; அதற்கான கட்டணம் குறைவாக இருக்கும் என்பதை தவிர பிற விபரங்களை அவர் வழங்கவில்லை.

இந்த திட்டத்தை வெளியிடுவதற்கு முன்னால், சுகாதார செயலாளராக தாம் நியமித்திருக்கும் டாம் பிரைஸ் அந்த பதவிக்கு நாடாளுமன்றத்தால் உறுதி செய்ய வேண்டுமென காத்திருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.

தங்களுடைய மெடிகேர் மற்றும் மெடிகெய்டு போன்ற மருத்துவ திட்டங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் பற்றி அரசோடு நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட மருந்து நிறுவனங்களை கட்டாயப்படுத்த போவதாக டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்