கிழக்கு சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தியர் எல்-செளர் நகரை கைப்பற்ற தீவிரம்

கிழக்கு சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் அரசு படைகள் இடையே கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற கடும் மோதல்களில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

தியர் எல்-செளர் நகரில் ஐ.எஸ் மிகப்பெரிய தாக்குதல் நடவடிக்கை ஒன்றை தொடங்கியதை அடுத்து நகரின் உள்ளேயும் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் சண்டை தொடங்கியதாக பிரிட்டனை சேர்ந்த சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பகமானது தெரிவித்துள்ளது.

பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தீவிரவாதிகள். ஆனால், அரசு ஆதரவுப் பெற்ற படையை சேர்ந்த சுமார் 30 உறுப்பினர்கள் இந்த மோதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

இவர்களை தவிர்த்து டஜனுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தியர் எல்-செளர் நகரின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

தற்போது, அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்