துருக்கிய சரக்கு விமானம் கிர்கிஸ்தானில் விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலி

கிர்கிஸ்தானில் உள்ள முக்கிய விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் துருக்கிய சரக்கு விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விபத்தில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் அருகே உள்ள கிராமம் முழுக்க விபத்துக்குள்ளான விமானத்தின் பெரிய சிதறல் துண்டுகள் பரவி உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images

15 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், கார்கள் நொறுக்கப்பட்டுள்ளன.

விமானம் கிராமத்தில் மோதிய போது பல குடியிருப்புவாசிகள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த விமான விபத்துக்கு விமானியின் தவறே காரணம் என்று குற்றஞ்சாட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அங்கு நிலவிய கடும் பனி காரணமாக பார்க்கக்கூடிய நிலை என்பது மிகவும் மோசமாக இருந்ததுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

நாளை (செவ்வாய்கிழமை) ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்