உலக பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டத்தை அதிகரித்தது சர்வதேச நாணய நிதியம்

இந்த ஆண்டு 3.4 சதவீதம் விரிவடையும் என்று கூறி உலக பொருளாதார வளர்ச்சி கண்ணோட்டத்தை சர்வதேச நாணய நிதியம் அதிகரித்திருப்பதோடு, 2018 ஆம் ஆண்டு இன்னும் அதிக முன்னேற்றம் இருக்குமென கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை SAUL LOEB/AFP/Getty Images

சுவிட்சாலாந்தின் மலை வாசத்தலமான டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டுக் கூட்டம் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னால், சர்வதேச நாணய நிதியத்தின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

சர்வதேச வர்த்தகத்தை தடுக்கும் தற்காப்புவாதத்தை நோக்கிய மாற்றம் உள்பட பல ஆபத்துக்களை இது சுட்டிக்காட்டியுள்ளது.

அதிகரித்து வரும் கடன் பற்றி சீனாவை சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தாலும், சீனாவின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை முன்னர் எதிர்பார்த்தைவிட குறைவாகவே தெரிவதாக இது குறிப்பிடுகிறது.

மேலும் பார்க்க:

சீனப் பொருளாதார வளர்ச்சி வேகக் குறைவால் ஏற்படும் பாதிப்பு (காணொளி)

உலகப் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஐஎம்ஃஎப் கவலை

கிரேக்க கடன் மீட்பு ஒப்பந்தம்: சர்வதேச நாணய நிதியம் கண்டனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்