சிறைக்கலவரங்களை கட்டுப்படுத்த பிரேசில் அதிபர் புதிய யோசனை

பிரேசிலில் உள்ள சிறைச்சாலைகளில் தற்போது அதிக கூட்டம் இருப்பதை எளிதாக்கும் வண்ணம், அந்நாட்டில் அடுத்த ஆண்டில் 30 புதிய சிறைச்சாலைகள் கட்டப்படும் என்று பிரேசில் அதிபர் மிஷேல் டெமர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிரேசிலில் கடந்த வராத்தில் நடந்த ஒரு சிறை கலவரம்

இவ்வாறு உருவாக்கப்படும் புதிய சிறைச்சாலைகளில், 5 சிறைச்சாலைகள் மிக அதிக பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலைகளாக இருக்கும்.

அவற்றில், பிரேசிலின் வடக்குப் பகுதியில் உள்ள சிறைச்சாலைகளில் நடைபெற்ற பல கலவரங்கள் மற்றும் கொலைகளால் நாட்டின் சிறை அமைப்பை நெருக்கடியான நிலையில் மூழ்கடித்த கும்பல்களின் தலைவர்கள் அடைக்கப்படுவார்கள்.

பிரேசிலின் எல்லைப் பகுதிகளில் ஒரு நிரந்தர பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பதையும் டெமர் அறிவித்தார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சிறைக்கலவரங்களை கட்டுப்படுத்த பிரேசில் அதிபர் புதிய யோசனை

பிரேசிலின் வடக்குப் பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளில், இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மோதலில் ஈடுபட்டு வரும் இரண்டு குழுக்களுக்கு இடையே தொடங்கிய வன்முறையால் குறைந்தது 140 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்