மெக்சிகோ: தலை வேறு, உடல் வேறாக கொல்லப்பட்டவர்கள் கிடத்தப்பட்ட பயங்கரம்

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான கெராரோவில் ஒரு லாரியின் மேற்கூரையில் கொல்லப்பட்ட ஆறு நபர்களின் வெட்டுண்ட தலைகளையும், லாரியின் உள்ளே உடல்களையும் தாங்கள் கண்டறிந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு அருகேயுள்ள பகுதியொன்றில், வேறு நான்கு பேர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல்களில் சித்ரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன.

கெராரோ பிராந்தியத்தின் தலைநகரான சில்பான்சிங்கோ நகரில் இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட அதிகாரிகள், இக்கொலைகள் தங்களுக்குள் தொடர் போர் நடத்தி வரும் இரண்டு போதை மருந்து கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களால் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஓபியம் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக மெக்சிகோவில் கொலைகள் அதிகரித்துள்ளன

மெக்சிகோவின் மிகவும் ஏழ்மையான பகுதியாக உள்ள கெராரோவில், ஓபியம் மற்றும் மரிவானா ஆகிய போதைப் பொருள்களின் வியாபாரம் தொடர்பாக நடக்கும் கொலைகளின் விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்