இஸ்தான்புல் இரவு கேளிக்கையக தாக்குதல் தொடர்பாக முக்கிய சந்தேக நபர் கைது

புத்தாண்டு தினத்தன்று இஸ்தான்புல்லில் உள்ள இரவு கேளிக்கையகம் ஒன்றில் நிகழ்ந்த தாக்குதல் தொடர்பான ஒரு முக்கிய சந்தேக நபர், இஸ்தான்புல் நகரில் உள்ள ஒரு அடுக்கக வளாகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption போலீசார் வெளியிட்ட கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் புகைப்படம்

ரத்தம் சிந்திய மற்றும் காயம்பட்ட நிலையில் காணப்பட்ட உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த அப்துல் காதிர் மாஷாரிபோவ் என்ற இந்த 34 வயது நபரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

போலீஸ் விசாரணைக்கு முன்னர், கைது செய்யப்பட்ட இந்நபருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட நபரின் வீட்டு வளாகத்தில் இருந்த அவருடைய நான்கு வயது மகன் போலீஸ் பாதுகாப்புக் காவலில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.

புத்தாண்டு தினத்தன்று பிரத்தியேக கேளிக்கையகமான ரீய்னா இரவு கேளிக்கையகத்தில் ஆயுதம் ஏந்திய நபரொருவர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

தாங்கள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ. எஸ். அமைப்பு முன்பு தெரிவித்திருந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்