வர்த்தக போரில் யாரும் வெல்ல முடியாது : சீனா அதிபர் ஷி ஜின் பிங்

உலகத்தின் பிரச்சினைகள் அனைத்துக்கும் உலகமயமாக்கலைக் குற்றம் சொல்லக் கூடாது என சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption உலகப் பொருளாதார அரங்கில் பேசும் சீன அதிபர் ஷி ஜின் பிங்

அதிகரிக்கும் வருமான இடைவெளி மற்றும் போதுமான உலக அளவிலான ஆளுகை இல்லாமை போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை என வருடாந்திர உலகப் பொருளாதார அரங்கில் தனது உரையில் சீன அதிபர் ஷி ஜின் பிங் தெரிவித்தார்.

உலகில், பணம், பொருட்கள் மற்றும் மக்கள் தங்கு தடை இன்றி புழங்கும் நிலைக்கு சீனா இட்டுச் செல்லும் என்று ஷி ஜின் பிங் தெரிவித்துள்ளார்.

வர்த்தக போரில் யாரும் வெல்ல முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இது, சீன ஏற்றுமதியில் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற உறுதியளித்த அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை சீன அதிபர் கண்டிக்கும் கருத்தாகப் பார்க்கப்படுகிறது.

பால்பாயிண்ட் பேனா: நெருடலில் சீனா

தென் சீனக்கடல் விவகாரம் : டிரம்ப் நிர்வாகத்துடன் மோத தயாராகும் சீனா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

எங்களது செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர :பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண ; பிபிசி தமிழ் யு டியூப்