தெஹ்ரான் : தீ விபத்து சம்பவத்தில் மேலும் 25 பேரின் நிலை என்ன ?

தெஹரானில் கடந்த வியாழனன்று உயரமான கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததை தொடர்ந்து, 20 தீயணைப்பு வீரர்கள் அதில் பலியானதாக நம்பப்பட்ட நிலையில், தற்போது மேலும் 25 பேரின் நிலை என்னவென்று தெரியாமல் இருப்பதாக இரானில் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

17 மாடிகளை கொண்ட பிளாஸ்கோ கட்டடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஒன்று ஏற்பட்டு அது பரவியதை தொடர்ந்து சிலமணி நேரம் கழித்து கட்டடம் தரைமட்டமானது.

அலுவலகங்கள் மற்றும் ஆடைகள் பட்டறைகள் கொண்ட கட்டட பகுதியிலிருந்து பாதுகாப்பு வெளியேற்ற நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

இடிபாடுகளுக்கு சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புதவி பணியாளர்களின் முயற்சிகளுக்கு அடர்த்தியான புகை மற்றும் தீ முட்டுக்கட்டையாக அமைந்ததுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்