காலக்கெடு முடிந்த பின்னரும் பதவியிலிருந்து விலக மறுக்கும் காம்பியா அதிபர்

காம்பியாவின் நீண்ட நாள் அதிபராக பதவி வகித்த யாக்யா ஜமேவிற்கு வழங்கப்பட்டிருந்த நண்பகல் காலக்கெடுவானது முடிந்துள்ள போதிலும், அவர் பதவி விலக சம்மதிக்க ஒரு இறுதி முயற்சி ஒன்றை மேற்கு ஆஃப்ரிக்க தலைவர்கள் மேற்கொள்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காம்பியாவின் புதிய அதிபராக அடாமா பாரோ பதவியேற்ற சில மணி நேரங்களில் படையினர் எல்லையைத்தாண்டி காம்பியாவிற்குள் நுழைந்தனர்.

கினியா மற்றும் மோரிட்டேனியாவின் அதிபர்கள் ஜமேவுடன் மேலும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்காக தலைநகர் பஞ்சூலுக்கு விரைந்துள்ளனர்.

அதன்படி, ஜமேவுக்கு வழங்கப்பட்ட காலக்கெடுவானது நான்கு மணி நேரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காம்பியாவின் நீண்ட நாள் அதிபராக பதவி வகித்த யாக்யா ஜமே

அதுவரை ராணுவ நடவடிக்கைகளை மேற்கு ஆஃப்ரிக்க படைகள் நிறுத்தியுள்ளன

கடந்த வியாழக்கிழமையன்று காம்பியாவின் புதிய அதிபராக அடாமா பாரோ பதவியேற்ற சில மணி நேரங்களில் படையினர் எல்லையைத்தாண்டி காம்பியாவிற்குள் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.