நைஜீரியா : டிரம்புக்கு ஆதரவாக பழங்குடியினர் மேற்கொண்ட பேரணியில் வன்முறை

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக நைஜீரியாவில் உள்ள பிரிவினைவாத குழுவான பயஃப்ரா என்ற பழங்குடியின மக்கள் நடத்திய பேரணி ஒன்றில் வன்முறை வெடித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நைஜீரியாவில் டிரம்புக்கு ஆதரவாக பழங்குடியினர் மேற்கொண்ட பேரணியில் வன்முறை

தென் கிழக்கு பகுதியில் உள்ள மாநிலங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கானோர் நகரை நோக்கி பேரணி சென்றதாக தெற்கு நைஜீரியாவில் உள்ள ஹர்கோர்ட் துறைமுகத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல போராட்டக்காரர்களை போலீஸார் சுட்டுக் கொன்றதாக அக்குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதனை போலீஸார் மறுத்துள்ளனர். வெறும் கண்ணீர் புகைக்குண்டுகளை பயன்படுத்தியதாக கூறியுள்ளனர்.

பழங்குடியின மக்களின் சுதந்திர இயக்கத்தை டிரம்ப் அங்கீகரிப்பார் என்ற நோக்கில் அதிபர் தேர்தலின் போது இந்த குழுவானது குடியரசு கட்சியின் வேட்பாளாரான டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்