டிரம்ப்புக்கு எதிரான பெண்களின் போராட்டங்கள்

அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்புக்கு எதிராக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் பெண்கள் நடத்தும் வெகுஜன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

இதுவரை நடைபெற்றதில் மிகப் பெரிய போராட்டம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் நடந்த போராட்டம் ஆகும்.

டிரம்ப் பெண்களை பாலியல் ரீதியாக மோசமாக பார்க்கும் நடத்தை கொண்டவர் என்ற கண்டனத்தை முன்வைத்து அங்கு அமெரிக்க தூதரகத்தை நோக்கி சுமார் மூவாயிரம் பேர் ஊர்வலமாக சென்றனர்.

சகோதரிகளின் பேரணி (sister marches), என்று அழைக்கப்படும் 700 பேரணிகள் உலகம் முழுவதும் நடத்த இன்று திட்டமிடப்பட்டுள்ளது.

பெரிய அளவில் வாஷிங்டன் நகரத்தில்மக்கள் பேரணிக்காக அணிவகுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிலும் பல்வேறு இடங்களில் டிரம்ப் பதவி ஏற்பு விழாவிற்குப் பிறகு போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சியாட்டில் நகரில் நடந்த ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது நடந்த மோதல்களில் ஒரு சுடப்பட்டு காயமடைந்தார்.