இத்தாலி: பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து மோதி 16 பேர் மரணம்

இத்தாலியின் வட பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று மோதி தீ பிடித்ததில் குறைந்த்து 16 பேர் உயிரிழந்துள்ளதாக அவசர மீட்புதவி அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

படத்தின் காப்புரிமை Vigili del Fuoco

வெள்ளிக்கிழமையன்று ஹங்கேரியில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த பேருந்து, வெரோனாவுக்கு அருகில் ஏ4 வாகனப்பாதையை விட்டு வெளியேறியபோது, சாலையோரத்தில் இருந்த தூணில் மோதியது.

39 பேர் இதில் காயமடைந்துள்ளதாக இத்தாலியின் தேசிய தீயணைப்புப்படை தெரிவித்திருக்கிறது.

மலை பிரதேசத்திற்கு விடுமுறையை கழிக்க சென்றுவிட்டு, பிரான்ஸிலிருந்து புடாபெஸ்டுக்கு பேருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கோபுர தூணில் இந்த வாகனம் மோதியவுடன், பெரும்பாலும் பதின்ம வயதினராக இருந்த 14 முதல் 18 வயது வரையான பள்ளி மாணவர்கள் தூக்கி எறியப்பட்டதாக இத்தாலிய செய்தி நிறுவனமான அன்சா தெரிவித்திருக்கிறது.

அந்த சாலையை விட்டு பேருந்து எதனால் திரும்பியது என்று இதுவரை தெரியவில்லை.

பேருந்து தீ பற்றியபோது பலர் பேருந்தில் சிக்கியிருந்ததாக அது கூறியுள்ளது. மருத்துவமனையில் இருக்கும் காயமடைந்தோரில் பத்து பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உயிழப்புக்கள் இனி அதிகரிக்காது என்று தீயணைப்பு வீரர்கள் கூறியுள்ளனர்.

மிலானில் இருக்கும் துணை தூதரக அதிகாரிகள் வெரோனாவை வந்தடைந்திருப்பதாக ஹங்கேரி ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்