ஹூனான் மாகாண நிலச்சரிவில் ஹோட்டல் புதையுண்டு 12 பேர் பலி

சீனாவின் மத்திய பகுதியிலுள்ள ஹூனான் மாகாணத்தின் சிறியதொரு ஹோட்டல் ஒன்று, நிலச்சரிவில் புதையுண்டதில், 12 பேர் பலியாகியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நிலச்சரிவு (கோப்புப்படம்)

இந்த கட்டடத்தின் இடிபாடுகளில் புதையுண்டு காணாமல் போயிருப்போர் உயிருடன் இருக்கலாம் என்ற நம்பிக்கையில் இரவு முழுவதும் மீட்புதவி பணியாளர்கள் தேடியுள்ளனர்.

ஆனால், அவர்களின் பூதவுடல்களை மட்டுமே கண்டறிந்துள்ளனர்.

மூவாயிரம் கன அடி நில இடிபாடுகள் செங்குத்தாக சரிந்து இந்த ஹோட்டலை மோதியுள்ளன என்று சீனாவின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஷின்ஹுவா கூறியது.

கனமழை காரணமாக ஹூனான் மாகாணத்தில் நிலச்சரிவுகள் பொதுவாக நடைபெறும் என்றாலும், இந்த நிலச்சரிவு ஏற்பட்டதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்