பொருளாதார மற்றும் அரசு விமர்சகருடையவை உள்பட 17 சீன இணையதளங்கள் முடக்கம்

ஒரு முக்கிய பொருளாதார மற்றும் சீன அரசின் விமர்சகர் மாவ் யுஷியால் நடத்தப்படுகின்ற இரண்டு இணையதளங்கள் உள்பட 17 சீன இணையதளங்களை அரசு முடக்கியிருப்பதாக சீன அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

படத்தின் காப்புரிமை EPA

குறிப்பிடப்படாத சீன சட்டங்களை மீறியுள்ளதால், மாவ் யுஷியின் தியன்செ பொருளாதார நிறுவனத்தின் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

பிற இணையதளங்கள் ஆபாச படங்களை கொண்டிருந்ததால் அல்லது முறையான பதிவு இல்லாமல் இருந்ததால் முடக்கப்பட்டுள்ளன.

மாவ் யுஷி என்பவர் சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தம் பற்றி வெளிப்படையாக வாதிடுபவர் ஆவார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்