நெதர்லாந்து : 70 மில்லியன் டாலர் வைர கொள்ளை சம்பவத்தில் 7 சந்தேக நபர்கள் கைது

நெதர்லாந்து 70 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்களை கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ஏழு பேரை கைது செய்திருப்பதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

டச்சு நாட்டை சேர்ந்த ஐந்து ஆண் மற்றும் இரண்டு பெண் என மொத்த 7 பேர் ஆம்ஸ்டெர்டாம் மற்றும் ஸ்பெயினில் உள்ள வலென்ஸியா நகரில் கைது செய்யப்பட்டனர்.

2005 ஆம் ஆண்டில், ஆம்ஸ்டெர்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்தில் மிகவும் பாதுகாப்பான இடம் என கருதப்பட்ட ஒரு பகுதியிலிருந்து விமானநிலைய பணியாளர்களை போல உடையணிந்து வந்த ஆயுதம் தாங்கிய குழு ஒன்று விமானத்திற்குள் ஏற்றப்பட இருந்த ரத்தின கற்கள் அடங்கிய வாகனத்தை கடத்திச் சென்றது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளிகள் தப்பிக்க பயன்படுத்திய வாகனத்திலிருந்து சில வைரங்கள் பின்னர் மீட்கப்பட்டன.

ஆனால், சுமார் 43 மில்லியன் டாலர்கள் மதிப்பு உடையதாக கணிக்கப்பட்ட கற்கள் இறுதிவரை மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்