பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து விலகும் ஆணையில் கையெழுத்திட்ட டிரம்ப்

பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்றழைக்கப்படும் டிபிபி ஒப்பந்த திட்டத்தில் இருந்து அமெரிக்கா தன்னை விலக்கி கொள்ளும் ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டு, தனது தேர்தல் பிரச்சார உறுதிமொழியொன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறைவேற்றியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters

முன்னாள் அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவின் ஆசிய கொள்கையின் அச்சாணியாக இந்த 12 நாடுகள் வர்த்தக ஒப்பந்தம் விளங்கியது.

இந்த ஒப்பந்தத்தை ஒரு கையெழுத்தின் மூலம் முறித்துக் கொண்ட டொனால்ட் டிரம்ப், இது குறித்து கூறுகையில், ''அமெரிக்க தொழிலாளர்களுக்கு ஒரு மிகப் பெரிய நன்மையை நாங்கள் தற்போது செய்துள்ளோம்'' என்று குறிப்பிட்டார்.

பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிளவுபட்ட அமெரிக்க நாடாளுமன்றம் இதற்கான இசைவை அளிக்காததால், டிபிபி தொடர்பான நிர்வாக ஆணையில் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டது ஒரு வெறும் குறியீட்டளவிலான நடவடிக்கை என்றே கருதப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்