பிரெக்ஸிட் நடைமுறை தொடங்க நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு - உச்ச நீதிமன்றம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய ராஜ்ஜியம் விலகுவதற்கான நடைமுறைகளை தொடங்குவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பொருந்துகிற அளவிலான சட்டத்தை சில நாட்களில் பிரிட்டிஷ் அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

படத்தின் காப்புரிமை Supreme Court

மார்ச் மாதத்தின் இறுதியில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவற்கான நடைமுறைகளை தொடங்குவதற்கான அரசின் திட்டத்தை இந்த புதிய சட்டம் தாமதப்படுத்தாது என்று பிரெக்ஸிட் எனப்படும் பிரிட்டன் ஐரோப்பாவிலிருந்து விலகும் வழிமுறையை மேற்பார்வை செய்கின்ற அமைச்சர் டேவிட் டேவிஸ் கூறியிருக்கிறார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் மக்கள் வாக்களித்ததை முறியடிப்பதற்கு இந்த சட்டத்தை யாரும் ஒரு கருவியாக பயன்படுத்த மாட்டார்கள் என்று நம்புவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த பிரெக்ஸிட் நடைமுறையை தொடங்குவதற்கு முன்னர் நாடாளுமன்றத்திடம் ஆலோசிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது பிரிட்டிஷ் சட்டத்தை திருத்தியமைக்கிறது, எனவே, நாடாளுமன்றம் இது குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும் என்று 11 நீதிபதிகளில் எட்டு பேர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இதற்கு ஸ்காட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியவை ஆலோசிக்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் ஒருமனதாக நிராகரித்திருக்கின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்