தென் சீன கடல் உரிமைகளை விட்டு கொடுக்க போவதில்லை - சீனா

தென் சீனக்கடலிலுள்ள சர்வதேச கடல் பரப்புகளை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அதிபர் டிரம்பின் நிர்வாகம் உறுதிமொழி எடுத்திருப்பதை தொடர்ந்து, அந்த தென் சீனக் கடல் மீது தான் கோரும் உரிமைகளை விட்டுக் கொடுக்க போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

தென் சீன கடலிலுள்ள தீவுகள் மீதும், அதனை சுற்றிய பகுதிகளிலும் தாங்கள் மறுக்கமுடியாத இறையாண்மையை கொண்டிருப்பதாகவும், தன்னுடைய உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்து கொள்வதில் உறுதியுடன் இருப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் கூறியிருக்கிறார்.

சீனா செயற்கையாக உருவாக்கி இருக்கும் தீவுகளை அணுகுவதில் இருந்து, அதனை அமெரிக்கா தடுக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு செயலராக நியமிக்கப்பட்டிருக்கும் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்திருக்கிறார்.

பல ஆசிய அண்டை நாடுகள் உரிமை கோரி வருகின்ற தென் சீன கடற்பகுதியில், ஏறக்குறைய அனைத்து பகுதிகளையும் தன்னுடையது என்று சீனா உரிமைகோரி வருகிறது,

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்