தேசிய பாதுகாப்பு தொடர்பான 'முக்கிய நாளுக்கு' தயாராவதாக டிரம்ப் தகவல்

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கும் இடையில் ஒரு தடுப்பு சுவர் கட்டும் திட்டத்தை தொடங்கி வைப்பது உட்படதேசிய பாதுகாப்புகுறித்த ஒரு 'முக்கிய நாளுக்கு' தான் திட்டமிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

குடியேறிகளை கட்டுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பது போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ள பல நிர்வாக ஆணைகளில் அவர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கும் இடையில் ஒரு எல்லை சுவரை கட்டுவது என்பது டிரம்ப்பின் பிரச்சாரத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

ஏழு மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலும் இஸ்லாமிய நாடுகள், குறிப்பாக சிரியா, இராக் மற்றும் இரான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் குடிமக்களுக்கு அளிக்கப்படும் விசாவிற்கு கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவருவது தொடர்பாகவும் அவர் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள், மனிதாபிமான அமைப்புக்களை கோபமூட்டுவதாக இருக்கலாம் என்று பிபிசியின் வாஷிங்டன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.