மெக்சிகோவில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள எல்லைச் சுவர் திட்டம்

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே கட்டப்பட உத்தேசித்துள்ள எல்லை சுவர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அடுத்த வாரம் வாஷிங்டனில் மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நியேடோ சந்திக்கவுள்ள சூழலில், அக்கூட்டத்தை ரத்து செய்யுமாறு என்ரிக் பினா நியேடோவுக்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த கூட்ட அறிவிப்பு மெக்சிகோவெங்கும் ஒரு பரந்த சீற்றத்தை தூண்டியுள்ளது. அந்நாட்டின் எதிர்க்கட்சியினர் இதனை ஒரு விரோதச் செயல் என்று அடையாளப்படுத்தியுள்ளனர்.

இது குறித்த பதில் நடவடிக்கையை ஆலோசிக்க மெக்சிகோவின் மாநில ஆளுநர்கள் மற்றும் செனட் அவை ஆகியோர் அவசர மற்றும் நெருக்கடி கூட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையே ஒரு எல்லை தடுப்புச் சுவரை கட்டுவதன் மூலம் அமெரிக்கா மெக்சிகோவில் இருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவிலிருந்தே தனிமைப்பட்டு விடும் என்று மெக்சிகோ சிட்டி நகரின் மேயரான நிகில் மன்கேரா எஸ்பினோசோ தெரிவித்துள்ளார்.

இந்த எல்லை தடுப்புச் சுவர் திட்டத்துக்கு மெக்சிகோ தரப்பில் இருந்து நிதி வழங்கப்படாது என்று மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நியேடோ மீண்டும் மீண்டும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்