குடியேறிகள் பிரச்சனையால் அரசு நிதி வெட்டு அறிவிப்பு : 'அச்சமில்லை' என தெரிவித்த அமெரிக்க நகர மேயர்கள்

சட்ட விரோத குடியேறிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நகரங்களுக்கான அரசு நிதியில் வெட்டு ஏற்படுத்தப் போவதாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பின் திட்டத்தால், தாங்கள் அச்சமடையப் போவதில்லை என்று அவ்வாறான குடியேறிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் பல அமெரிக்க நகரங்களின் மேயர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

அரசின் இந்த நிர்வாக நடவடிக்கையை எதிர்த்து தான் போராடப் போவதாக தெரிவித்த நியூ யார்க் நகரின் மேயரான பில் ட பிளாசியோ, இது தொடர்பாக ஒரு சட்ட சவாலுக்கு போதுமான அடிப்படை உள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாஸ்டன் நகர மேயர் மார்டி வெல்ஷ், இது பாஸ்டன் நகர மக்கள் மற்றும் அவர்களின் மதிப்பு மீது தொடுக்கப்பட்ட நேரடி தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ளளார்.

படத்தின் காப்புரிமை Reuters

தேவைப்பட்டால், நகர மண்டபத்தில் தான் குடியேறிகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும் தயார் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் தனது நகரத்தை அச்சுறுத்தி பலவீனப்படுத்த முடியாது என்று கூறியுள்ள சியாட்டில் நகர மேயரான எட் மர்ரீ, இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி சியாட்டில் நகருக்கான அரசு நிதி திரும்பப் பெறப்பட்டால், நிதி பற்றாக்குறையை சரி செய்யும் விதமாக பட்ஜெட்டில் மாற்றங்கள் செய்திட தான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்