சொந்த ஊருக்கான வழியை மறந்து 30 நாள் 500 கி.மீ சைக்கிளில் பயணம்

சீன புத்தாண்டைக் கொண்டாடும் ஆர்வத்துடன் தன் சொந்த ஊருக்கு சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர், 30 நாட்கள், 500 கி.மீ. பயணித்த பிறகுதான், தான் வழிமாறிச் சென்று கொண்டிருந்தததை உணர்ந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோப்புப்படம்

ஹேலூங்ஜியாங் மாகாணம் கிக்கியாரில் உள்ள தன்னுடைய வீட்டை இலக்காக வைத்து ஒரு இளம் புலம் பெயர்ந்த பணியாளர் ரிஜோவிலிருந்து புறப்பட்டார்.

கிக்கியாரிலிருந்து சுமார் 1,700 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ரிஜோ.

ஆனால், பாதை மாறி பயணித்துக் கொண்டிருந்ததை அவர் உணரவில்லை. 500வது கிலோ மீட்டரில் போக்குவரத்து காவலர்களால் மத்திய சீன மாகாணமான அன்ககுவோவில் நிறுத்தப்பட்டார்.

அந்த நபர் தவறான வழியில் பயணித்ததை அதிகாரிகள் கண்டறிந்தப்பின், அந்த நபர் வீடு சென்று சேர ரயில் கட்டணத் தொகையை அவருக்கு அளித்துள்ளனர்.

டிசம்பர் மாதம் ஷான் டூங் மாகாணத்தில் உள்ள ரிஜோவிலிருந்து அந்த நபர் புறப்பட்டார்.

பயணத்தின்போது, இடையிடையே இணைய சேவை மையங்களில் வசித்த வந்த அந்த நபர் நிதிபற்றாக்குறையால் தவித்து வந்துள்ளதாக பீப்பிள்ஸ் ஆன்லைன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கையில் காசு இல்லாவிட்டாலும், தன் வீட்டிற்கு செல்வதில் மிகவும் உறுதியாக இருந்த அந்த நபர் சைக்கிள் மூலம் செல்ல தீர்மானித்தார்.

பெயர் தெரியாத அந்த பருக்கு வரைப்படங்களை பயன்படுத்த தெரியாது, அதனால் வழிகளுக்காக பிறருடைய உதவி தேவைப்பட்டதே அதற்கு அர்த்தம்.

சைக்கிள் ஓட்டுபவர்கள் பயன்படுத்த கூடாத நெடுஞ்சாலை ஒன்றில் இந்த நபர் பயணித்த போதுதான் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

தன்னுடைய தவறை அந்த நபர் உணர்ந்தபின், தான் தடுத்து நிறுத்தப்பட்ட சுங்கச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் போலீஸார் ஒன்றிணைந்து அவர் வீடு திரும்புவதற்கான ரயில் கட்டணத்தை கொடுத்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்