டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டுத் தலைவர் தெரீசா மே

அமெரிக்கா செல்லும் பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்பை சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர் ஆவார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இன்று பிற்பகுதியில் அவர் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார். அப்போது அவர் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் உலகை வழிநடத்தி செல்ல தற்போது ஒரு வாய்ப்பு பெற்றுள்ளன என்று கூறுவார் என்று தெரிகிறது.

டிரம்ப் சமீபத்தில், சித்ரவதை செய்வதை ஆதரித்து தெரிவித்துள்ள கருத்துக்கள், இந்த சந்திப்பை சங்கடத்துக்கு உட்படுத்தும் என்றும் தோன்றுகிறது.

சித்ரவதை வழிமுறைகள் வேலை செய்யும் என்று நம்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் தண்ணீரில் மூழ்கடித்து சித்ரவதை செய்வது போன்ற தண்டனைகள் குறித்து பாதுகாப்பு செயலர் மற்றும் சி ஐ ஏவின் இயக்குநரின் கருத்தை அனுமதிக்கப்போவதாக அவர் கூறியுள்ளார்.